தேர்தல் மீறல்கள் தொடர்பில் இதுவரை 35 முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப் பகுதியில் 12 முறைப்பாடுகள் ‘கபே’ அமைப்புக்கும் 35 முறைப்பாடுகள் பவ்ரல் அமைப்புக்கும் கிடைத்துள்ளன.இது குறித்து கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்ததாவது; உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் மூன்று வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏனையவை அரச உடைமைகளைப் பயன்படுத்துவது தொடர்பானவை.
பொது மக்களுக்கு உதவிகள் வழங்குவது போன்றனவும் அடங்கும். அக்கரைபற்றில் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரு கட்சி ஆதவாளர்களுக்கிடையிலான மோதல் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமுள்ளன.
நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.
‘‘தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 35 முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வன்முறைச் சம்பவங்களும், அரச உடைமைகள் முறையற்ற பாவனை போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன’’ என பவ்ரல் அமைப்பின் செயற்பாட்டாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply