ட்ரம்புடன் நட்பு பாராட்டுவதற்காக இஸ்லாமின் புனிதத்தை நான் தியாகம் செய்ய மாட்டேன்
_ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டின் நிர்வாக தலைநகரான புட்ரஜயா நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக்:- நமது மதத்தை உயர்த்தி பிடித்து பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாகும். ஜெருசலேம் இஸ்லாமியர்களின் புனித பூமி என்றால் அதை யூதர்களிடம் இருந்து நாம் விடுவிக்க வேண்டும்.__
பாலஸ்தீன மக்களுக்கு ஜெருசலேம் சொந்தமாகும் வரை அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர முறையிலும் விவாதங்கள் மற்றும் பிரார்த்தனை மூலமாகவும் இதற்காக அனைத்து வகையிலும் போராடுவேன்.
மேலும் ட்ரம்ப்புடன் நட்பு பாராட்டுவதற்காக இஸ்லாமின் புனிதத்தை நான் தியாகம் செய்துவிட முடியாது’ என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply