இனி தமிழ் மொழியிலும் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள்

இனி வரும் காலங்களில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்களை தமிழ் மொழியிலும் வெளியிட நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது வரை காலம் சிங்கள மொழியில் மாத்திரமே சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனால் வடக்கு , கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பாடசாலை அதிபர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஆனால் இனி வரும் காலங்களில் அந்த நிலைமைக்கு இடமளிக்கப்படாது எனவும் தமிழ் மொழியிலும் சுற்று நிருபங்கள் வெளியிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply