வவுனியா நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
வவுனியா நகர் மற்றும் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலை புலிகளின் மாவீரர் தினம் நெருங்கி கொண்டு இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகர் பகுதிக்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் ஒருகட்டமாக நேற்றைய தினம் வவுனியா நகர் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது நகர் பகுதிக்கு வந்த அனைத்து மக்களிடமும் தேசிய அடையாள அட்டை மற்றும் தொழில் புரியும் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்டதுடன் உடற் சோதனைகளும் தீவிரமாக நடைபெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply