கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நெருங்கும் படையினர்
வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகளை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இந்த மோதலின் போது புலிகள் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள் ளதுடன் மேலும் 20 பேர் படுகாயமடைந்து உள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்ததாவது இரட்டைவாய்க்காலுக்கு தெற்குப் பகுதியில் சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகளை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது படையணியினர் புலித் தலைமைகள் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளனர்.
இந்நிலையில் புலிகளுடனான கடைசி சண்டையை எதிர் பார்த்துள்ளனர். 58வது படையணியினருக்குப் சமாந்திரமாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 53வது படையணியினர் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள 15ஆயிரம் தொடங்கம் 20ஆயிரம் வரையிலான பொதுமக்களை மீட்பதற்கான மனிதாபிமான மீட்புப் பணிகளை மேலும் திவிரப்படுத்தியுள்ளனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply