துருக்கியில் புதுவருட முன்னெச்சரிக்கையாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் 29 பேர் கைது

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு புது வருடத்தை வரவேற்பதற்காக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியில் திரண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 39 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வரவிருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் வகையில் பயங்கரவாத தடுப்பு படையினர் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வெள்ளிக்கிழமை (29) தலைநகர் இஸ்தான்புலில் உள்ள பல்வேறு இடங்களில் பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply