தபால்மூல வாக்காளர்களில் 5 இலட்சத்து 60ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்பு!
நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில், சுமார் ஐந்து இலட்சத்து அறுபதாயிரம்(5,60,000) விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்காளர்களில் 5 இலட்சத்து 60ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்பு!
தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 8ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 22 ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுகளுக்கான மேலதிக ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply