வணக்கஸ்தலத்தை வழங்கினால் மதகுருவின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் : மஹிந்த
வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது வருமானங்களையும் சொத்துக்களையும் சமர்பிக்க வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply