சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்கள்!
எண்ணெய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, 195 பில்லியன் ரியால் பற்றாகுறை பட்ஜெட் ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய மானியங்கள் ரத்து செய்யப்பட்டு மதிப்பு கூட்டு வரி அமுல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் குடும்பத்து உறவினர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதன் மூலம் மன்னர் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் என்பன நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இதனை கண்டித்து ரியாத் நகரில் உள்ள காசிர் அல் ஹாகிம் மன்னர் அரண்மனையின் முன்பாக 11 இளவரசர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களை அப்புறபடுத்துமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததனர். இதனால் அவர்களை கைது செய்ய தேசிய பாதுகாப்புபடையினருக்கு உத்தரவிடப்பட்டது.
உத்தரவை தொடர்ந்து 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டு ஹாயிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply