முதுமையில் பராமரிக்காத மகன்களிடம் ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த தைவான் தாய்
தைவானை சேர்ந்த பெண் லுவே. கணவரிடம் விவகாரத்து பெற்ற இவர் தனது 2 மகன்களை கஷ்டப்பட்டு தனியாக வளர்த்தார். இவர்கள் 2 பேரையும் பல் டாக்டர்களுக்கு படிக்க வைத்தார்.முதுமையில் தன்னை மகன்கள் கை விட்டு விடுவார்களோ என லுவோ அஞ்சினார். எனவே பிற்காலத்தில் பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 60 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என ஒரு ஒப்பந்தம் தயார் செய்து கையெழுத்து வாங்கினார்.
அதன்படி மகன்களும் தனது தாயாருக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டனர். படிப்பு முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து நல்ல லாபத்துடன் பணம் வர ஆரம்பித்தது. தாய் லுவோவுக்கும் வயதாகி விட்டது.
ஆனால் மகன்கள் அளித்த வாக்குறுதிபடி ரூ.10 கோடியே 50 லட்சத்தை வழங்கவில்லை. பணம் எதுவும் தரமுடியாது எனக் கூறி பராமரிக்கவும் மறுத்து விட்டனர்.
அதை தொடர்ந்து லுவோ தைவான் கோர்ட்டில் மகன்கள் மீது வழக்கு தொடர்ந்தார். போடப்பட்ட ஒப்பந்தப்படி தனக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மகன்களிடம் நஷ்டஈடு கேட்டு தாய் தொடர்ந்து வழக்கு பற்றி தைவானில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணக்கு வந்தது. அப்போது தாய் லுவோவுக்கு அவரது மகன்கள் ரூ.6 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply