இம்ரான்கான் 3-வது திருமணம்?: பாகிஸ்தானில் பரவும் வதந்தி
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெக்முக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.
அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தினத்தன்று ஒரு பெண்ணை இவர் திருமணம் செய்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இம்ரான்கானின் 3-வது திருமணத்தை பாகிஸ்தான் தெக்ருக்-இ-இன்சாப் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முப்தி சயீத் என்பவர் நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் லாகூரில் ஜனவரி 1-ந்தேதி இரவு நடைபெற்றது.
மணப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது முதல் கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்தகவலை பாகிஸ்தான் தெக்முக்-இ-இன்சாப் கட்சி மறுத்துள்ளது. இச்செய்தி முட்டாள் தனமானது.
இம்ரான்கான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. எனவே அவர் மீது இது போன்ற அவதூறு செய்திகளை பரப்பி விட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இம்ரான்கான் திருமணம் செய்ததாக கூறும் பெண்ணின் முன்னாள் கணவர் கூறும் போது, “நாங்கள் இருவரும் விவாகரத்து செய்தது உண்மை தான். ஆனால் அவர் இம்ரான்கானை திருமணம் செய்யவில்லை என மறுத்தார்.
ஆனால் இம்ரான் கானுக்கு 3-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படும் கட்சி பிரமுகர் முப்தி சயீத் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் இம்ரான்கானின் 3-வது திருமணம் செய்தி பாகிஸ்தானில் வைரலாக பரவி வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply