சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் உடபட 18 பேர் பலி
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் இத்லிப் மாகாணம் போராளிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் சிரிய அதிபருக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகளின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதலில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தை ஒட்டி இருந்த மற்ற கட்டிடங்களும் இடிந்து விழுந்தது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply