பாக்தாத் குண்டு வெடிப்பில் 28 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மார்க்கெட்டில் 2 கார் குண்டு தாக்குதலும், ஒரு தற்கொலை தாக்குதலும் நடந்தன. இவற்றில் 28 பேர் பலியானார்கள். 68 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஓட்டல்கள் நிறைந்த தெருவில் நடந்தது. பள்ளிக்கூட சிறுவர்களை ஒரு பஸ் ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டு சென்றதும் நடந்தது.

தாக்குதல் நடந்த பகுதி சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அகமதியா என்ற பகுதியாகும். காயம் அடைந்தவர்களில் பெண்களும், சிறுவர்களும் தான் அதிகம் ஆகும். கிட்டத்தட்ட 37 பேர் மெடிக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply