சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு
சவூதி அரேபியால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அந்நாட்டு மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் ஜெட்டா நகரில் தனியார் கார் நிறுவனம் புதிய ஷோரூம் ஒன்றை திறந்து0ள்ளது. இது பெண்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் ஷோரூம் இதுவாகும். இதன் மூலம் பெண்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்வு செய்து ஓட்டலாம். கார் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் உதவி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஷோரூமில் பெண் ஊழியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான கார் ரகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நிறுவனம் சவூதியில் பெண்களுக்காக அதிக அளவில் ஆட்டோ மொபைல் ஷோரூம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதே போல் உபர் மற்றும் கரீம் டாக்சி நிறுவனங்கள் பெண் டிரைவர்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன. சவூதியில் அதிக அளவிலான பெண்கள் டாக்சிகளில் பயணம் செய்வதால் இது பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply