துருக்கியில் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் :162 பயணிகள் உயிர் தப்பினர்

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பிகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான நிலைய ஊழியர்களும் பயணம் செய்தனர்.

டிராப்சன் நகரை அடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடியது. அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக 162 பயணிகளும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply