மோதல் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
விடுவிக்கப்படாத பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வான் மார்க்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. “புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக நீங்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், நீங்கள் மனிதக் கேடயங்களாகவும் வைக்கப் பட்டுள்ளனர். எனவே, உங்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறி வாருங்கள்” என ஜனாதிபதி விடுத்தவேண்டுகோள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வான் மார்க்கமாக வீசப்பட்டுள்ளன.
வெளியேறும் மக்களின் பாதுகாப்பைத் தான் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார். பொதுமக்கள் வாழும் பகுதிகளை நோக்கி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தக் கூடாது என ஜனாதிபதி இராணுவத்தினருக்கு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களை வெளியேறுமாறு தற்பொழுது கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், நேற்று வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை காலையும் சுமார் 100 எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மோதல் பகுதிளிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் கூறியிருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்கள் இருக்கும் பகுதிகளை நோக்கி தாம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர்நிறுத்தமொன்றுக்குத் தாம் செல்லப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உலகளாவிய ரீதியில் மறைந்திருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் எழுந்து நிற்போம்” என ஜனாதிபதி தனது மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply