வாழ்த்து தெரிவிக்க விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்

இந்த ஆண்டு புது வருட பிறப்பின் போது வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply