ஊவா அதிபர் விவகாரம்: விசாரணை நடாத்த பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு
ஊவா மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் புஜித ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பிலேயே விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply