வார இறுதியில் 98 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
எல்லை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருட இறுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட 98 இந்திய மீனவர்களை இந்த வார இறுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்ளிட்ட 113 பேர் இது வரையில் இலங்கை சிறையில் இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
எல்லை மீறி மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 113 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களில் 98 பேர் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்பட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
மேலும் இம்மாத தொடக்கத்தில் 69 பேர் விடுதலை செய்யப்பட்டதுடன், இன்னும் 16 பேர் இக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டோர் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply