தொடரும் அத்துமீறல் நடவடிக்கை – 12 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.தொடரும் அத்துமீறல் நடவடிக்கை – 12 தமிழக மீனவர்கள் கைது தலை மன்னார் பகுதியில் வைத்து நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் பின்னர் அவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே இடம்பெறுகின்றது.
எனினும், தமிழக மீனவர்களின் இந்த செயற்பாட்டால் வட மாகாணத்தில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கைதுசெய்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply