என்ன நடவடிக்கை என்பது குறித்து அடுத்த வாரம் தெரிய வரும் : ஜனாதிபதி

இரு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதை அடுத்த வாரத்தில் மக்கள் கண்டுகொள்வார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பில் கண்டறிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. இந்த அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி இந்த அறிக்கைகள் இரண்டு குறித்த விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply