தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது’: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே கர்நாடக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்த உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘காவிரி நீர் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும், கர்நாடக முதல்-மந்திரியும் ஆலோசனை நடத்தி தீர்வு காணட்டும், அதனால் ஒன்றும் இல்லை. ஆனால் கர்நாடகாவிலேயே தற்போது தண்ணீர் இல்லை. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது’ என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய பட்ஜெட், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply