இப்படியும் ஒரு வினோதம்: சீனாவில் ரோட்டை திருடி விற்ற ‘பலே’ ஆசாமி
சீனாவில் ஜியாங் ஷு மாகாணத்தில் சான்கேசு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தின் வழியாக செல்லும் 800 மீட்டர் நீள ரோடு இரவோடு இரவாக திடீரென மாயமானது.சிமெண்ட் கான்கிரீட்டால் போடப்பட்ட அந்த சாலையை யாரோ ஒரு மர்மநபர் வெட்டி பெயர்த்து எடுத்து சென்று விட்டான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் ‘ஷிகு’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் இந்த ரோட்டை வெட்டி எடுத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
அந்த ரோட்டின் 500 டன் கான்கிரீட் கலவையை உடைத்து நொறுக்கி அதை விலைக்கு விற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று இருக்கிறார். எனவே இவரை போலீசார் கைது செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply