உதயங்க வீரதுங்க டுபாயில் கைது
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் அவர் பயணம் செய்த விமானம் டுபாயில் தரையிறங்கியிருந்த இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினராவார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியமை, ரஷ்ய தூதரகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இரு மர்ம மரணங்கள் என்வற்றிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உதயங்க வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச் சீட்டை இவர் இன்னும் பயன்படுத்தி வருவதாகவும் இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு மிக் விமானம் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியிலும் இவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply