தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், இந்தப்பெண் அமைச்சரை அவரது அமைச்சில் வைத்து கொலை செய்ய முயற்சித்தபோதும் பின்னர் அவரது இணைப்பு அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
 
இந்தநிலையில் குறித்த பெண், வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்தவர் என அவருடைய அடையாள அட்டையை கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இந்த பெண்ணின் அடையாளத்தை மேலும் நிரூபித்துக் கொள்வதற்காக புளியங்குளம் கிராமசேவகரை தாம் அழைத்தபோதும்; அவர் சமுகம் அளிக்கவில்லை என இரகசிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
 
இது தொடர்பாக மாகாணச் செயலரை வினவியபோது குறித்த கிராமசேவகர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்தி;ல் இருந்தே குறித்த பெண் வசிக்கும் இடத்திற்கு கடமைக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்து தற்கொலையாளியின் சகோதரரிகள் எனப்படும்  கணேஸ் மல்லிகா மற்றும் கணேஸ் சுலோச்சனா ஆகியோரின் இரத்தமாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply