இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்பட ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் : சுசில்
எமது இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சிறு புறக்கணிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில மணித்தியாலங்களில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.ஜனாதிபதியிடம் கேட்கவும் இல்லை, ஜனாதிபதியை அறிவுறுத்தவும் இல்லை. வெளிவிவகார அமைச்சு இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அறிவித்திருந்தது.
இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதாக தேர்தலின் போது உறுதியளித்துள்ள ஜனாதிபதி, இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply