இந்தியா செல்கிறார் பிரதமர் ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் அளவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன. தேர்தல் முடிவின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய சில பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்படி பெரும்பாலும் அடுத்த வாரமளவில் இந்தியாவுக்கு பயணிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா விஜயத்தின் போது மத்தள விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்தியாவுடன் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் பல தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply