பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இலங்கையில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆளும் கூட்டணியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இலங்கையில், 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் இன்று ஒரே நாளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 8375 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல பகுதிகளிலும் மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். தமிழர் வாழும் பகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதையொட்டி அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 65 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முப்படையை சேர்ந்த 900 வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில், 25% இடங்கள் மகளிருக்காக முதல் முறையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 60% இடங்களில் வார்டுகளில் போட்டியிட்டு வென்றவர்களாலும், 40% இடங்கள் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் பேரில் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படும்.
இந்தத் தேர்தலில் அதிபர் சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றையொன்று எதிர்த்து, போட்டியிடுகின்றன. ஆளும் கூட்டணி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, ஊழல் அதிகரித்து இருப்பதாக கூறி முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சி இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்தது.
ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் அந்நாட்டு அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply