மனிதக் கரு முட்டைகளை ஆய்வகத்தில் வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதல்முறையாக மனித கருமுட்டைகளை முழு முதிர்ச்சியடைவதற்கு முந்தைய நிலை வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் எலி முட்டைகள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டன. அதன் பின் மனித கருமுட்டைகளை விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். இந்த கருமுட்டைகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாக இருக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்த சிகிச்சை முறை வெற்றியடைந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
இது குறித்து பேசிய விஞ்ஞானிகள், ‘இந்த முறை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இது எதிர்காலத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த முறை வெற்றி பெற்றால் வருங்காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கருவை பாதுகாத்து ஆரோக்கியமான குழந்தையை பெற முடியும். மேலும் கருமுட்டை வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்’ என தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply