இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிவது தொடர்பாக ஆராயும் மாநாடு
வன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலை மையில் கொழும்பு ஜெய்க்ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
ஐ. நா. வுடன் இணைந்து நடத்தப்படும் இந்த மாநாட்டில் இணைத் தலை மைத்துவ நாடுகள், உதவி வழங்கும் நாடுகள், தொண்டு நிறுவனங்கள் என்பன பங்கேற்க உள்ளதாக இடர் முகா மைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு நேற்று கூறியது.
வன்னியில் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு மேலும் பல வசதிகள் அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு அவர்களின் தேவைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் அடங்கிய பட்டியல் இன்று உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டினூடாக இலங்கைக்கு கூடுதல் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ. நா. தொண்டு நிறுவனங்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களில் சுமார் 1,67,330 பேர் வவுனியாவில் உள்ள 24 நலன்புரி நிலையங்களிலும் யாழ்ப்பாணத்தில் 11,150 பேரும் திருகோணமலையில் 4 ஆயிரம் பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக ஐ.நா. தொண்டு நிறுவனங்களும் உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.
இவர்களின் உதவிகளை கிரமமான முறையில் பெற அரசு திட்டமிட்டுள்ளதோடு ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திடம் இருந்தும் எத்தகைய உதவிகளை பெறுவது என்பது குறித்தும் இன்று ஆராயப்பட உள்ளன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ. நா. மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ¤டனும் வன்னி மக்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே மேற்படி உதவி வழங்கும் மாநாடு கூட்டப்படுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளது தெரிந்ததே.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply