உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4000மாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 8500ஆக காணப்படுகின்றது.இந்த எண்ணிக்கையை சுமார் 4000மாக குறைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.

மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி நிறுவப்படவில்லை எனவும், குறிப்பாக வெற்றி பெற்ற கட்சிகளினால் ஆட்சி அமைக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளே 90 வீதம் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply