புதிய ஆண்டில் புதிய திசையில் பணிக்க வேண்டுமென்பதே எமது வேணவா: செல்வம் அடைக்கலநாதன்

மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு தமிழர் வாழ்வில் நின்று நிலைக்கும் மகிழ்ச்சியையும் அரசியல் அபிலாசைகளையும் ஈடேற்றித்தரும் ஆண்டாக அமைய வேண்டுமென விரும்புகிறேன். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக இணைந்த முயற்சிகள் இப்புதிய ஆண்டில் புதிய திசையில் பணிக்க வேண்டுமென்பதே எனது வேணவா என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் விடுத்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இந்து தமிழ் மக்களும் பௌத்த சிங்கள மக்களும் இணைந்து கொண்டாடும் சித்திரை புத்தாண்டு போல் மாறுபட்ட மதமும் வேறுபட்ட மொழியும் இணைந்து கொண்டாம் பண்டிகைகள் உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இரு மதம் இரு மொழி சார்ந்த மக்களால் பல்நெடும் காலம் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டு, கடந்த 70 வருடங்களாக இலங்கையின் தேசியப் பெரு விழாவாக நிகழாதிருக்க தடையாக இருப்பது அரசியல் நல்லிணக்கம் இன்மையேயன்றி வேறொன்றும் சொல்வதற்கில்லை.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இன்னும் இருக்கும் எமது மக்களின் வாழ் நிலங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கோரும் நீதி, யுத்தத்தால் விதவையாக்கப்பட்ட 90 ஆயிரத்துக்கும் அதிகமான வட-கிழக்கு வாழ் பெண்களின் எதிர்காலம், வேலைக்காக ஏக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளையோர்கள் இவ்வாறு இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு யுத்த முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் தீர்வுகள் இல்லை.

மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு தமிழர் வாழ்வில் நின்று நிலைக்கும் மகிழ்ச்சியையும் அரசியல் அபிலாசைகளையும் ஈடேற்றித்தரும் ஆண்டாக அமைய வேண்டுமென விரும்புகிறேன். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக இணைந்த முயற்சிகள் இப்புதிய ஆண்டில் புதிய திசையில் பணிக்க வேண்டுமென்பதே எனது வேணவா என அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply