சிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்தானது’ – ஐக்கியநாடுகள் சபை கண்டனம்

_காஷ்மீரில் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பெண் கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து ஐக்கியநாடுகள் சபை பெண்கள் அமைப்பின் தலைவியான மிலம்போ- நகோடா கூறுகையில், காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த பெண் கற்பழிப்பு சம்பவங்கள் கண்டனத்துக்குரியவையாகும். இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள பிரதமர் நரேந்திரமோடி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது ஆகும்.

 

 

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது அனைத்து மனித சமுதாயத்துக்கும் எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பில் இருந்து நாம் விலகுவதாக அமையும். இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான தண்டனைகள் மூலமே கற்பழிப்பு-கொலை இல்லாத நிலை ஏற்படும்’ என்றார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply