சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை உறுதி : கெஹெ­லிய ரம்­புக்­வெல

_எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்­களில் கூட­ வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு இது குறித்த நடவ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது என கூட்டு எதிர்க்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். 

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றமை குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்­களில் கூட­வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு இது குறித்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது. புது­வ­ரு­டத்தின் பின்னர் கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற குழு இன்னும் கூட­வில்லை.

 

சில தினங்­களில் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூடி இது தொடர்பில் முடிவை எடுக்­க­வுள்­ளது. ஆனால் நம்­பிக்­கை­யில்லா பி்ரேரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­வது உறு­தி­யா­கி­விட்­டது. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

 

காரணம் அவர் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை சரி­யான முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார். எனவே அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும்.

 

தனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டால் அதனை எதிர்­கொள்ள தயார் என்று சம்பந்தனும் அறிவித்துள்ளார். எனவே அதனை கொண்டுவரலாம். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கயைில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் அதனால் அரசாங்கத்துக்குள் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதுவே எமக்கு கிடைத்த வெற்றி என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply