வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது: எஸ்.வினோ நோகராதலிங்கம்

வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளிலே தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றுள்ளது” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்ததார்.மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நோகராதலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த சில தினங்களாக சுவார்ஸ்யமான சம்பவங்களும்,குழி பறிப்புக்களும், விட்டுக்கொடுப்புக்களும், கட்சித்தாவல்கள் என பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று உள்ளூராட்சி மன்றங்களின் தலைமை பொறுப்புக்கள் தேர்தல்கள் ஊடாகவும், அதிஷ்ட சீட்டிலுப்புக்கள் ஊடாகவும் நடந்து முடிந்துள்ளது.

அதில் பல கவலைக்கிடமான சில துண்பியல் சம்பவங்களும் அதே போல் மகிழ்ச்சிக்குரிய விட்டுக்கொடுப்பாண சம்பவங்களையும் நாங்கள் நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக வவுனியா, மன்னார் மாவட்டத்திலும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தெரிவுகளிலும் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் நல்ல அனுபவங்களை இந்த புதிய தேர்தல் முறை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.

நிச்சயமாக அடுத்த தேர்தல் இந்த நடை முறையிலே இடம் பெறாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களினால் எந்த விதத்திலும் நேரடியாக ஒரு வட்டாரத்தில் இருந்தும் தெரிவு செய்யப்படாத நிலையிலே மக்கள் நிராகரித்த உறுப்பினர்கள்க ‘போனஸ்’ ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்று தலைவர்களாக இருக்கின்றார்கள்.

இதுதான் இத்தேர்தல் நடைமுறையில் உள்ள ஒரு நிலைப்பாடு. இது மாற்றப்பட வேண்டும்.மக்களின் எண்ணங்கள், விருப்பங்களுக்கு மாறாக அவர்களே முன் வந்திருக்க கூடாது.

என்னை ஒரு வட்டாரத்தினுடைய உறுப்பினராக கூட தெரிவு செய்ய அந்த மக்கள் இடம் கொடுக்கவில்லை. அந்த முழுப்பிரதேசத்திற்கும் தலைவராக நான் எப்படி வர முடியும்??என அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். அவர்களுடைய கட்சி சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் எப்படியாவது அந்தந்த இடங்களிலே பிரதேச ரீதியாகவும்,மத ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அங்கே பிளவுகள் தோன்றி மக்களினுடைய விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

இதிலே மதம் அல்லது இனம் அனைத்திற்கும் அப்பால் மக்களினுடைய விருப்பை புறந்தள்ளி சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தெரிவிலே சிங்கள சகோதர உறுப்பினர்களுடைய வாக்குகள் அங்கே ஒரு கட்சிக்கு தேவைப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து அவர்கள் சிங்கள மக்களினுடைய ஆறு பிரதிநிதிகளினுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ளுகின்றார்கள். தலைமைத்துவத்தை தாம் எடுத்துக்கொள்ளுவதற்காக,

ஆனால் அவர்கள் அங்கே தோற்றுப்போக அதே சபையிலே உப தலைவரை தெரிவு செய்யும் பொழுது ஒரு சிங்கள பிரதி நிதியை தெரிவு செய்வதற்கு அந்தக்கட்சி தயக்கம் காட்டுகின்றது.

இது எந்த விததில் நியாயம்? இது தான் அங்கே நடை பெற்றது.தமிழ் தேசியக்கூட்டமைப்பை வீழ்த்தவதற்காக அவர்களின் ஆதரவு தமக்கு தேவை. யாரோடும் கூட்டு சேர்வதற்கு தாம் தயாராக இருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் அங்கே இருந்து கொண்டு தங்களை உப தலைவராக்குங்கள் என்ற பொழுது அவர்கள் அங்கே மறுக்கின்றார்கள்.இங்கேயும் அதே நிலைப்பாடு தான்.

மன்னார் பிரதேச சபையிலே பெறும்பான்மையானவர்கள் தமிழர்கள். இரண்டாவதாக அங்கே முஸ்ஸீம் சகோதரர்கள் இருக்கின்றார்கள்.

அங்கே தமிழர்கள் தான் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். உப தலைவர் அங்கே நிச்சையமாக முஸ்ஸீம் இனத்தவராக இருக்க வேண்டும்.நாங்கள் அதற்கான முயற்சிகளை எடுத்தோம். முஸ்ஸீம்களின் பிரதி நிதியாக மன்னார் பிரதேச சபையிலே நாங்கள் உப தலைவரை வழங்க இருந்தோம்.

ஆனால் அங்கேயும் அவர்கள் வேறு காரணங்களுக்காக சொந்தக்கட்சியையும் மீறி அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவுகள் காரணமாக அங்கே தலைவர் , உப தலைவர்களாக முஸ்ஸீம் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.”என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply