பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நேற்றிரவு நிறைவு

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நேற்று (20) இரவு 8.30 மணிக்கு லண்டன் விண்ட்சர் மாளிகையில் நிறைவடைந்தது.25 ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவியில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடுகளின் பொதுநலவாயம் எனப்படுவது முன்னாள் பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த, 53 உறுப்பு நாடுகளைக் கொண்ட பன்னாட்டு அமைப்பாகும்.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைத்தையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்யவே பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply