பாராளுமன்றத்தை புனர்நிர்மானம் செய்ய 200 மில்லியன் ஒதுக்கீடு
பாராளுமன்றத்தை புனர்நிர்மானம் செய்ய 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதுன்றது. 30 வரும் பழைமையான பாராளுமன்ற கட்டிட தொகுதியில் செய்யப்படவேண்டிய பல புனர்நிர்மான நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த புனர்நிர்மான பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும், இவ்வாண்டு புனர்நிர்மான பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply