மக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா

_65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான். அணு ஆயுத சோதனைகள் நடத்தியது தான் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு காரணமாக இருந்தது.__

 

கிம் ஜாங் உன் – மூன் ஜேஇல் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வரும் மே மாதம் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

ஜூன் மாதத்தில் கிம் ஜாங் உன் – டிரம்ப் சந்திப்பு நடக்க உள்ள நிலையில், இது ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply