உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘காற்று மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் வாரனாசியில் மாசு மிக அதிக அளவில் உள்ளது. இதையடுத்து, டெல்லி, கான்பூர், கவாலியர், பரைதாபாத், கயா, ஆக்ரா, பாட்னா, முசாபர்நகர், ஸ்ரீநகர், குருகான், ஜெய்ப்பூர், பட்டியாலா மற்றும் ஜோத்பூர் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகள் மிகவும் மாசடைந்து காணப்படுகின்றன. இப்பகுதிகளில் சல்பேட், நைட்ரேட் மற்றும் கார்பன் போன்ற மாசுக்கள் காற்றில் கலந்து உள்ளன. இதனால் மக்களுக்கு இதய பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன ‘ எனக்குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply