எட்டு இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.இதற்கமைய எட்டு இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
குறித்த இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,
01. பாலித ரங்கே பண்டார : நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்.
02. திலீப் வெதரச்சி : கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
03. எம்.எல.ஏ.எம். ஹிஸ்புல்லா : நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
04. மொஹான் லால் குரேரு : உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
05. சம்பிக பிரேமதாச : தோட்டத் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்
06. லக்ஷ்மன் செனவிரட்ன : பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்
07. ஸ்ரீயானி விஜேவிக்கிராம : விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர்
08. வீரகுமார திசாநாயக்க : மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply