திவிநெகும பண மோசடி தொடர்பான வழக்கு ஜூன் 17ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17ம் திகதி வரை பிற்போடுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், இந்த வழக்கை நீதிபதி கிஹான் குலதுங்க விசாரிப்பதற்கு எதிர்வரும் 09ம் திகதி வரை இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்காரணமாக வழக்கு விசாரணைக்காக வேறு ஒரு தினம் வழங்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிபதி கிஹான் குலதுங்க வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17ம் திகதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply