அரோரா விண்வெளி சொகுசு ஹோட்டல் செல்ல முன்பதிவு தொடக்கம்
இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்க இருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாக பார்க்க முடியும்.__
இந்த விண்வெளி அரோரா ஸ்டேஷன் ஹோட்டலில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. விண்வெளி உணவகத்திற்கு செல்ல விரும்புவோர் 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி உணவகத்தில் தங்க தனிநபருக்கு ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என தெரிகிறது. தவிர, இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply