பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ்க் கட்சிகளை ஜனாதிபதி இன்று சந்தித்துப் பேசவுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டியது ஒரு அத்தியாவசிய தேவை. சில வாரங்களுக்கு முன் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை ஒரு துரதிஷ்டமான நிகழ்வு.
தமிழ் மக்களின் நலனுக்கு அப்பாற்பட்ட காரணிகளாலேயே அச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் வழி நடத்தப்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் மக்களின் பிரதி நிதிகளென உரிமை கோருபவர்களும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை தெரிவிப்பவர்களும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தவிர்த்துக் கொள்ள முயற்சிப்பது அம்மக்களின் நலன் சார்ந்த செயற்பாடாக அமையாது.
தமிழ் மக்கள் தொடர்பாக இரண்டு விடயங்களில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலு த்த வேண்டியவர்களாக உள்ளனர். புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டும் விடுவிக்கப் பட்டும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்திருக்கும் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் ஒரு விடயம். தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மற்றைய விடயம்.
இதுவரை ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கின்றார்கள். இம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதில் அரசாங்கம் முன் னுரிமை அளித்துச் செயற்படுகின்றது. இவ்வளவு தொகையான மக்களின் அத்தியாவ சியத் தேவைகளை ஒரே நாளில் பூர்த்தி செய்வது சாத்தியமானதல்ல.
எனினும் அரசாங் கம் முழு சக்தியையும் பிரயோகித்து இம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதைவிட நாட்டின் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பொதுமக்க ளும் இயன்றளவில் இம்மக்களுக்கு உதவி வழங்குவதற்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துப்படுத்துவதாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை விமர்சனம் செய்வதைத் தவிர இம்மக்களு க்கு உதவுவதற்கு முன்வரவில்லை. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு இம்மக்களின் வாக்குகளும் பங்களிப்புச் செய்திருக்கின்றன.
இந்த நிலையில் இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேச வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கட்டமைப்புத் தலைவர்களுக்கு உண்டு. இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியை அரசாங்கமே மேற்கொள்வதால் அரசாங்கத்துடனேயே கூட்டமைப்புத் தலைவர்கள் பேச வேண்டும். தங்கள் கருத்துகளை அரசாங்கத்துக்கே தெரிவிக்க வேண்டும்.
இனப் பிரச்சினையின் தீர்வுக்கும் அரசாங் கத்துடனேயே பேசவேண்டும். தீர்வை நடை முறைப்படுத்த வேண்டிய பிரதான பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததென்பதால் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் பேசாமல் ஒதுங்கு வது தீர்வை அடைவதற்கான வழிமுறையாகாது. அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாட்டுக்குமிடையே இடைவெளி இருக்கலாம்.
பேச்சு வார்த்தை மூலம் அந்த இடைவெளியை நீக்குவதற்கு முயற்சிக்கும் தார்மீகப் பொறு ப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் ஒதுங்குவது இடைவெளி தொடர்வதற்கே வழி வகுக்கும்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையாக இருந்தாலென்ன, அரசியல் தீர்வாக இருந்தா லென்ன அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சு வார்த்தையே பலனளிக்கும். இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுட னும் பேசுவது தீர்வைத் தரப்போவதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுவதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மறுப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல்.
(தினகரன் ஆசிரியர் தலையங்கம்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply