கோட்டாபய போட்டியிட்டால் அவருடைய கட்டுப்பணத்தை நானே கட்டுவேன்: பொன்சேகா
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாயின் அவருக்குரிய வேட்பாளர் கட்டுப்பணத்தை தான் கட்டுவதற்கு பொறுப்பேற்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தை கட்டியதன் பிறகு அதனை மறந்துவிட வேண்டும். அதனை அவர் ஒருபோதும் வழங்க மாட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் எனது வீட்டுக்கு வந்த கோட்டாபய அழுதார். அதன்போதும் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டியிலிருந்து அனுப்பிக் கொண்டேன்.
அதேபோன்று, கட்டுப்பணத்தை கொடுத்து அவருக்கு உதவுவதற்கு நான் தயார் எனவும் அமைச்சர் பொன்சேகா மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply