இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலைனா பி டெப்லிட்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த பதவிக்கு நியமிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அலைனா பி டெல்லிட்ஸின் பெயரை செனட்சபைக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செனட் சபை அனுமதி அளித்தால் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவராக அலைனா பி டெல்லிட்ஸின் நியமிக்கப்படுவார்.வெள்ளை மாளிகையில் வைத்தே இவருடைய பெயர் நேற்றைய தினம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பரிந்துரையை வெள்ளைமாளிகை செனட்சபைக்கு அனுப்பிவைத்துள்ளது.

தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளத்துக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

செனட் சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகிக்கும் அதுல் கேஷப்பிற்கு பதிலாக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை 2015 ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் கேஷப் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply