அர்ஜூன் அலோசியஸ் 1.3 பில்லியன் ரூபாவை கட்சிகளுக்கு வழங்கியுள்ளார்: தயாசிறி

பேர்பசுவல் ரெசரிஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸினால் ஐ.தே.க. உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 இலட்சம் ரூபா வழங்கிய போதும் அவரை பாதுகாக்க ஒருபோதும் முயலவில்லை தான் முயலவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் பணம் பெற்றது தவறு என்றால், ஏனைய சகல கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply