இன்னும் 6 மாதத்தில் மடிக்கணினி இயக்க தெரியாத மந்திரிகள் நீக்கம் : நேபாளம் பிரதமர்

நேபாளத்தில் கே.பி. சர்மா ஒளி, கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமர் ஆகி உள்ளார். அவர் அந்த நாட்டில் அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி உள்ளார். அந்த வகையில் இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் என்று அறிவித்து உள்ளார். எல்லாமே கணினிமயமாகி விடும்.

கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படுமாம்.

மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை மந்திரிகள், தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

அப்படி 6 மாதங்களுக்குள் மந்திரிகள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டியது (பதவி நீக்கம்) நேரும் என்றும் அவர் வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply