இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி : பிரதமர் மோடி புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியல் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதி தற்போது அவரது கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார்.

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். மேலும், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

காலை முதலே அங்கு கூடிய தொண்டர்கள் கேக் வெட்டி, கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர். வழக்கமாக தொண்டர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக முக்கிய பிரமுகர்களை மட்டும் சந்திப்பதாக கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, தற்போது செயல்தலைவராக இருக்கும் மு.க ஸ்டாலின் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாநில மற்றும் தேசிய கட்சியைச் சார்ந்த அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. கருணாநிதி ஓர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், கவிஞர். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு இறைவன் அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி, சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மோடி சந்திக்க வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply