கேரளாவில் வேகமாக பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, இதுவரை மொத்தமாக 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நிபா வைரஸ் வெவ்வால்கள் மூலம் பரவும் நோயாகும். வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் அவை ஏதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள் சாப்பிட்டு இருந்தால், இந்த வைரஸ் தாக்கி இருக்கும் என்று கூறியுள்ளார். இது வேறு எப்படியெல்லாம் பரவுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது சாதாரண நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேரும் எல்லோருக்கும், இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மூளையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சரியாக 18 நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒருவர் இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்ட்டனர். இதுவரை இந்த நோய் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது வரை இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் எங்கும் பரவவில்லை. கர்நாடகாவில் ஒருவர் இந்த அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 200 பேர் இந்த அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களும், சுகாதரத்துறையும் இந்த வைரஸ் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. 26 பேர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply