ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ ல.சு.க. கூட்டம் இன்று ஆரம்பம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய கூட்டத்தில் தற்காலிக நிறுவாக சபை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் பெரும்பான்மையானோர் இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போதுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐ.ம.சு.மு.யின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை மாற்ற வேண்டும் என 16 பேர் கொண்ட குழு தரப்பில் பலமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இரு கருத்துக்கள் கொண்டவர்களின் அரசியல் தீர்மானங்களுக்கு மத்தியில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றமை அரசியல் மட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply